Sunday, July 12, 2009

நட்பு - இரண்டு கேள்விகள்..


1. நட்பு எல்லையற்றது.

2. மனைவியிடம் கூடப் பேசத் தயங்கும் விஷயங்களை நட்பிடம் பேச முடியும்.


இவ்விரண்டு கருத்துகளும், எங்கு நட்பு பற்றிய விவாதம் எழுந்தாலும் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன, இன்றைய நீயா-நானாவிலும்.


என்னைப் பொறுத்தவரை நட்புக்கு எல்லைகளுண்டு. ஆனால், எல்லைகளை வரையறுத்த பின், நட்பு சாத்தியமில்லை. எல்லைகளைப் பற்றிப் பேசும்போது அதன் இரு வகைகளை நாம் உணர வேண்டும். ஒன்று, காண முடிகிற எல்லை. எடுத்ததும் அந்தக் கோடு தான் கண்ணில் படும். அதுவே நெருங்க விடாமல் செய்யும். அப்படி இருந்தால் அது பழக்கம் மட்டுமே. பரஸ்பர உதவிகள் கூட இருக்கும், அதிக நெருக்கமில்லாமலேயே.

இன்னொன்று, உணர மட்டுமே முடிகிற எல்லை.
நட்பின் எல்லையை யாரும் போஸ்டர்அடித்தோ வகுப்பெடுத்தோ அறிவித்தோ செய்யாமல் இருக்கிற இயல்பு. எல்லைகள் கூட, மாறுதலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கும் அங்கே.

மனைவியை விட நட்பு பெரிதென்று சொல்லுவார்கள். Going by emotion or going by intellect என்ற இரண்டு அடிப்படை விஷயங்கள் இருக்கின்றன. எனவே, உணர்வுபூர்வமாக எது இருந்தாலும் அது அறிவினால் செல்ல வேண்டிய தருணத்திற்கு இடைஞ்சலாய் இருக்குமெனில், அங்கே மனைவியோ அல்லது நட்போ, எது உணர்வுபூர்வமானதோ, அது தள்ளி வைக்கப்படுகிறது.

விவாதம் தொடரலாம்.

4 comments:

  1. மனைவியையே நட்பாக வைத்துக் கொண்டால்??? அல்லது கணவனையே நட்பாகக் கருதினால்???? இதுவும் சாத்தியம் தானே????? ஆனால் நல்லதொரு விவாதக் கருத்து. தொலைக்காட்சியில் வருதா விவாதம்???? எந்த சானல்???

    ReplyDelete
  2. நண்பனுடன் அல்லது நண்பியுடன் நட்பாக இருப்பது
    effortless task. Either you can continue or end.
    மனைவியுடன் / கணவனுடன் எப்பொழுதும் நட்பாக இருப்பது
    requires special effort.
    மனைவிக்கோ கணவனுக்கோ - எப்பொழுதும்
    அது சாத்தியம் என்று கூற முடியாது.
    நண்பன் நண்பியுடன் - சண்டை -
    பின் விளைவுகள் கடுமையாக இராது;
    மனைவி / கணவன் சண்டை - பின் விளைவுகள்
    என்றும் இடும்பை தரும்.

    ReplyDelete
  3. Dear Geetha,

    "மனைவியையே நட்பாக வைத்துக் கொண்டால்??? அல்லது கணவனையே நட்பாகக் கருதினால்????"
    என்ற உங்கள் வரிகளே, நட்பு தான் பெரிது என்றும் நட்பு வேறு-கணவன் மனைவி பந்தம் வேறு என்ற த்வனியையும் தருகிறதே!
    இவ்விவாதம் வந்தது விஜய் டிவியில் .

    ReplyDelete
  4. Dear G,

    I remembered, how I explained to do a fight embedded with love, to my sishyai, when she and her husband had some misunderstandings!

    ReplyDelete